அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகள்.. எங்கள் ஊரில் நடந்து கொண்டிருக்கும் கொடுமையே இது.... கிளிமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இப்போது குறுவை நெல் அறுவடை நடந்துகொண்டுள்ளது... அரசு துவங்கிய நெல் கொள்முதல் நிலையங்களில் தான் சென்ற அறுவடை முதல் மக்கள் நெல்லை கொடுத்து வந்தனர் அரசு கொடுக்கும் நல்ல விலைக்காக...
ஆனால் இந்த கொள்முதல் நிலையங்களில் நடக்கும் அட்டகாசங்களால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை எழுந்துள்ளது.... இந்த நிலையத்தில் நெல் மூட்டைகளைக் கையாள்வதற்கு மூட்டைக்கு (40 கிலோ) ரூ.2.40 வீதம் அரசு கூலி வழங்குகிறது. ஆனால் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரிவோர், விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ7.00.௦௦ கேட்கின்றனர்.... ஏன் இப்படி என்று கேட்டால் கொள்முதல் நிலையத்தை மூடிவிட்டு சென்றுவிடுகின்றனர்... குறுவையில் நெல் அறுவடை செய்த மக்கள் மூட்டைகளை வீட்டில் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டுள்ளனர்....
அரசாங்கம் குவிண்டாலுக்கு ரூ1050௦ என விலை நிர்ணயம் செய்துள்ளது... தனியார் வியாபாரிகளோ குவிண்டால் ரூ840 ௦க்கு எடுக்கின்றனர்.... இந்த இடைத்தரகர்களின் தொல்லையால் நெல்லுக்கு சரியான விலை கிடைக்காமல் தவித்த மக்கள் கொள்முதல் நிலையம் வந்தபோது கொஞ்சமல்ல நிறையவே மகிழ்ச்சி அடைந்தனர்... ஆனால் இப்போது கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கும் இந்த தனியார் வியாபாரிகளுக்கும் உள்ள ரகசிய உடன்பாடே, நிலையத்தினர் மக்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செயாமலிருப்பதற்குக் காரணம்.... எங்களிடமிருந்து ௮௪௦க்கு வாங்கும் வியாபாரிகள் நிலையத்தில் அதே நெல்லை 1050௦ க்கு விற்கின்றனர்...இதில் அலுவலர்களுக்கு தனி கமிஷன் வேறு....
இதைப்பற்றி மாவட்ட ஆட்சியரிடம் புகார் சென்ற மறுநாள் கொள்முதல் நிலையம் சிறிது நேரம் திறக்கப்பட்டது... ஆனால் அன்றும் அவர்கள் அடித்த கூத்து இருக்கின்றதே...இது நாள் வரை ஒரு மூட்டைக்கு ரூ7.00 கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அன்று ரூ15.00 கேட்டனர்...(அப்போது தானே யாரும் வரமாட்டார்கள்...) அதுவும் சிலமணி நேரங்களே....பிறகு வழக்கம் போல் நிலையத்தை மூடிவிட்டனர்...
இவர்கள் அனைவருக்கும் அரசாங்கம் சம்பளம் தருகிறது தானே...விவசாயிகளுக்கு வருமானமே இதுதான்...அடுத்த 6 மாதங்களுக்கு அவர்களின் வாழ்க்கை இதை வைத்துதான் உள்ளது....அதிலும் இப்படிக் கை வைத்தால் என்ன செய்ய முடியும் அவர்களால்??? இதையெல்லாம் பார்க்கும் போது தோணுவது இந்த பழமொழிதான்...."உழுதவன் கணக்கு பாத்தா உழக்கு கூட மிஞ்சாது..."
Thursday, August 13, 2009
நீங்க எல்லாம் எப்போதான் திருந்துவீங்க????
எழுதியது...
கயல்விழி நடனம்
at
3:25 AM
Labels: அனுபவம்..., கிளிமங்கலம், நீங்க எல்லாம் எப்போதான் திருந்துவீங்க?
Subscribe to:
Post Comments (Atom)

10 பேர் கருத்து சொல்லி இருக்காங்க...:
உனக்கு ஏன் இவ்வளவு அக்கரை... யாருக்குமில்லாத அக்கரை ?
வேதனையான விஷயம்தான்...
என்ன இதெல்லாம் யாரும் கண்டிக்கவும் மாட்டாங்க..சரிசெய்யவும் மாட்டாங்க...
அரசு இயந்திரங்களின் பயனுறுதிறன் அவ்வளவுதான்.
என்னங்க இவ்வளவு சீரியஸ் கட்டுரைலாம் எழுதுவீங்களா..?!
தொடரவும்....உங்களோட நூறு முகத்தையும் பார்க்க விரும்புகிறோம்
(கேப்டன் தொகுதியா நீங்க...அப்ப சரி... :-) )
no chance
//அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகள்.. //
ஆ....ஹா... நீயா!!! கயல் எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டியேம்மா....
அரசியல் அராஜகத்தை தட்டி கேட்க வரும் தங்கத்தலைவி கயல்விழி அவர்களே வருக வருக.... எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு...
எப்படி இப்படியெல்லாம் திடீர்னு.... அதான்...இந்த மாதிரி பதிவு எல்லாம்.....
ஆனாலும் நல்ல விஷயம்தான் எழுதி இருக்க கயல்..
"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது"
ஏழையின் வயிற்றில் அடித்து பிடுங்கி தின்னும் கூட்டம், ரொம்ப நாளைக்கு நல்லா இருக்காது கயல்.... இந்த திருட்டு பூனைக்கு எல்லாம் ஒரு பெரிய காண்டாமணி கட்ட ஒரு நல்லவன் கூடிய சீக்கிரம் வருவான்....
உங்கள் சமூக அக்கறைக்கு என் சல்யூட்.....
நன்றி...ஆல் இன் ஆல் அழகுராஜா
//உனக்கு ஏன் இவ்வளவு அக்கரை... யாருக்குமில்லாத அக்கரை ?
பாதிக்கப்பட்ட கிராமத்தில இருந்து வந்தவ நான்...இது ஒன்னு போதும் என் அக்கறைக்கு...
நன்றி தமிழ்ப்பறவை...
//உங்களோட நூறு முகத்தையும் பார்க்க விரும்புகிறோம்
ரிஸ்க் எடுக்காதீங்க. :)
நன்றி பிரியமுடன் பிரபு...
நன்றி கோபி...
//"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது"
சரியா சொன்னீங்க....
//ரிஸ்க் எடுக்காதீங்க. :)//
அது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி... :-))
வணக்கம்
உங்கள் கோபம் சரிதான் ஆனால் ஏதாவது பலன்....
\\இதெல்லாம் யாரும் கண்டிக்கவும் மாட்டாங்க\\
இப்படி இருந்தா எதுவும் நடக்கும் வலியை உணருவது மட்டுமல்ல வலியை, கோபத்தை சரியாக வெளிக்காட்டுங்க.
படித்த, பல தொடர்புகள் உள்ள நாமும் அடங்கிப்போனா ஒன்னும் பண்ணமுடியாது
இராஜராஜன்
கேப்டன் கிட்ட சொன்னாங்களா ?
ஆனாலும் ரொம்பவே வருத்தப்பட வேண்டிய விஷயம்.
அழகான தேசம் எனது
ஆனால் இது போன்று அவல குரல்கள் ஏராளம்
ஊர்கூடி வடம் பிடித்தால் மட்டுமே தேர் அது நிலைவந்து சேரும்
இல்லையேல் கிளிமங்கலம் கிராமத்தில் உள்ள காணி நிலத்துக்கும் Cognizant நிறுவனம் கிளை தொடங்க நல்ல விலை வருமா என்றே யோசிக்க தோன்றும்
நான் சொன்னால் நீங்க கேக்கவா போறீங்க
Post a Comment