The Proposal - இந்த ஊருக்கு வந்த பிறகு நான் அரங்கில் பார்த்த முதல் படம்...1.30 மணி நேர படம் என்ற தைரியத்தில் தான் படம் பார்க்கவே சென்றேன்...(நம்ம English அறிவு மேல அவ்ளோ நம்பிக்கை...) எனக்கென்னமோ பெங்களூர் PVR அரங்கில் பார்ப்பது போல் தான் இருந்தது...
இதுல என்ன கொடுமைன்னா உள்ள எவனும் பேசவே இல்லை...சிரிக்காம, கமெண்ட் அடிக்காம, முக்கியமா விசில் அடிக்காம எப்படித் தான் படம் பார்க்குறது???கஷ்டம்டா சாமி...கூடை கூடையா பாப்கார்ன் சாப்பிடுறாங்க...அத தவிர வேற சத்தமே இல்ல...இதுக்கு எதுக்கு Theatre க்கு வரணும்??பேசாம வீட்லயே இருந்திருக்கலாம்...நல்ல வேளை...இவனுங்க படம் எல்லாம் 1.30 நேரம் தான் ஓடுது..அதனால நாம எஸ்கேப்...ஓகே...ஓகே...இப்போ கதைக்கு வரலாம்...
கதையும் அப்படி ஒன்றும் புதியது இல்லை....அமெரிக்காவின் பெரிய புத்தக அச்சகத்தின் தலைமை ஆசிரியராக இருக்கும் கனடா நாட்டைச் சேர்ந்த கதாநாயகி தனது விசா காலம் முடிந்ததால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதை தடுக்க தன் உதவியாளனை திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்துகிறார்...தனக்கு ஆசிரியராக பதவி உயர்வு தரும் பட்சத்தில் திருமணம் செய்ய சம்மதம் என்கிறார் கதாநாயகனும்...
அரசாங்கத்திடம் தங்களையும் தங்கள் காதல், திருமணம் இரண்டையும் நிரூபிக்கும் பொருட்டு இருவரும் அலாஸ்க்காவில் உள்ள நாயகனின் வீட்டில் சில நாட்கள் தங்க நேரிடுகிறது....அங்கே ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு உண்மையாகவே விரும்புகிறார்கள்...நாயகி நாயகனின் பாட்டியும் அம்மாவும் அவளின் மேல் வைக்கும் அன்பினாலும் நாயகனின் மேல் உள்ள அன்பினாலும் திருமணத்தன்று அனைவரின் முன்பும் உண்மையைச் சொல்லிவிட்டு அங்கிருக்கும் அரசாங்க அதிகாரியுடன் நியூயார்க் செல்கிறாள் அங்கிருந்து கனடா செல்ல...
நாயகனின் பாட்டி இவர்களைச் சேர்த்து வைக்க உடல் நலமில்லாதது போல் நடித்து ஏர்போர்ட்டில் நாயகியை பார்க்க செல்கிறார்கள் குடும்பத்துடன்...(அட பாவிகளா...இந்த கொடுமையைத்தானடா நாங்க தமிழ் படத்துலயும் பாக்குறோம்...ஏர்போர்ட்லயாவது படத்த முடிப்பாங்கன்னு பாத்தா வழக்கம் போல Flight கிளம்பிடுச்சி...) பின் நாயகன் நாயகியைத்தேடி நியூயார்க் வர..அவளோ கனடா செல்ல அலுவலகத்திலிருந்து புறப்படுகிறாள்...தங்கள் அலுவலகத்திலேயே தன் காதலை அவளிடம் சொல்லி, அரசாங்கத்தின் கேள்விகளுக்கும் பதில் சொல்லி ஒரு சேர்கிறார்கள் இருவரும்...(அப்பாடா ஒரு வழியா படம் முடிஞ்சிடுச்சி...)
இந்தப்படம் பார்க்கும் பொது சில பல தமிழ் படங்களோட கதையெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது....மௌன ராகம் (டெல்லி காட்சிகள்...), யாரடி நீ மோகினி..(மொக்கை க்ளைமாக்ஸ்...), நிறைய படக்ங்களின் பாட்டி அம்மா செண்டிமெண்ட்...அட போங்கப்பா...
Sunday, June 28, 2009
The Proposal.....
எழுதியது...
கயல்விழி நடனம்
at
2:55 PM
Labels: அனுபவம்..., சினிமா, மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)

10 பேர் கருத்து சொல்லி இருக்காங்க...:
இதத்தான நாங்க கேட்டோம்...
’நள தமயந்தி’ படக்கதையும்
கிட்டத்தட்ட இதே மாதிரிதான்...
//.சிரிக்காம, கமெண்ட் அடிக்காம, முக்கியமா விசில் அடிக்காம எப்படித் தான் படம் பார்க்குறது???கஷ்டம்டா சாமி...கூடை கூடையா பாப்கார்ன் சாப்பிடுறாங்க...//
ரொம்ப்ப்ப்பக் கஷ்டம்தான்...நீங்களாச்சும் விசிலடிச்சு நம்ம பெருமைய நிலை நாட்டியிருக்கலாம்...நீங்களும் பாப்கார்ன் சாப்பிட ஆரம்பிச்சுட்டீங்க போல...
//நிறைய படக்ங்களின் பாட்டி அம்மா செண்டிமெண்ட்...அட போங்கப்பா...//
(அப்பாடா ஒரு வழியா பதிவு முடிஞ்சிடுச்சு..:-) )
ah haa
andha MOKKAI padathayum ukkaandhu muzhusaa 1.5 hours paathuttu, oru KOODAI pop corn thinnuttu.... padam mokkai, climax mokkai, whistle adikka mudiyalennu solradhu ENNAA VILLATHANAM......
:)
"இந்த கொடுமையைத்தானடா நாங்க தமிழ் படத்துலயும் பாக்குறோம்..."
"சிரிக்காம, கமெண்ட் அடிக்காம, முக்கியமா விசில் அடிக்காம எப்படித் தான் படம் பார்க்குறது???"
உங்கள் கிண்டல்கள் அருமை
நன்றி தமிழ்ப்பறவை ...
நானும் விசிலடிக்கலாம்ன்னு தான் பார்த்தேன்...கூட வந்த பொண்ணு அதெல்லாம் தப்புன்னு சொல்லிடுச்சே...ச்ச...நெக்ஸ்ட் டைம்...கண்டிப்பா நம்ம பெருமைய நிலை நாட்டிட வேண்டியது தான்...
//(அப்பாடா ஒரு வழியா பதிவு முடிஞ்சிடுச்சு..:-) )
இத இத தான் நானும் எதிர்பார்த்தேன்...
நன்றி கோபி..நன்றி சென்ஷி..
நன்றி எம்.கே.முருகானந்தன்...
எனக்கும் பாப்கார்னுக்கும் ரொம்ப தூரம்...அதனால தான் இந்த மொக்கைப்பதிவே...இல்லைன்னா படம் நல்லா இல்ல...பாப்கார்ன் நல்லா இருந்துதுன்னு சொல்லி முடிச்சி இருப்பேன்...
:)
நடையும் எழுத்தும் நல்லாயிருக்கு.
வாழ்த்துகள்.
//இந்தப்படம் பார்க்கும் பொது சில பல தமிழ் படங்களோட கதையெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது....மௌன ராகம் (டெல்லி காட்சிகள்...), யாரடி நீ மோகினி..(மொக்கை க்ளைமாக்ஸ்...), நிறைய படக்ங்களின் பாட்டி அம்மா செண்டிமெண்ட்...அட போங்கப்பா..//
ரசித்தேன்.
(வெத்தலை பாக்கு)
கயல்விழி நடனம் உங்களைக் கேட்காமல் ‘கேள்வி-பதில்’ தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். தொடரவும்.
மேலும் விபரங்களுக்கு,http://thamizhparavai.blogspot.com/2009/07/32.html
:)
உங்கள் நடையில் இருக்கும் அங்கதம் சிலாகிக்க தூண்டுகிறது
தொடர்ந்து எழுதுங்கள்
அங்கதம் அவ்வளவு எளிதல்ல
நன்றி வண்ணத்துபூச்சியார் , கே.ரவிஷங்கர் , நேசமித்ரன்
Post a Comment