Tuesday, June 9, 2009

எப்படி வேலை செய்கிறது நம் கடனட்டை...(Credit Card)

பலருக்கு இது தெரிந்து இருக்கலாம்....தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன அறிமுகமாக இருக்கும் இந்த பதிவு....நம்மில் பலர் கடனட்டை(Credit Card) உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்...அவற்றை கொண்டு நாம் பொருட்களை வாங்கும் போது என்னென்ன நடக்கிறது என்பதை சொல்லப்போகிறேன்...சில பல ஆங்கில வார்த்தைகளை அதிகமாக உபயோகப்படுத்த வேண்டி இருக்கும்...மன்னிக்க...

பொதுவாக நம் கடனட்டையுடன் தொடர்புடையவர்கள் யார் யார்...

1. கடனட்டையை அளிக்கும் வங்கி..அதாவது Issuing Bank..

2. அட்டையின் முதலாளி அதாவது நாம் - Credit Card Holder..

3. வர்த்தகர்கள் - Merchants

4. வர்த்தகர்களின் வங்கிகள்(நமது அட்டைகள் கடைகளில் Swipe செய்யப்படும் வங்கிகள்) - Merchant Banks

5. இறுதியாக Networks..கடனட்டைகளை வங்கிகளுக்கு கொடுக்கும் கம்பனிகள்...(Visa, Amex, Master Card..போன்றவை..) என்ன தான் வங்கிகள் நமக்கு அட்டைகளை கொடுத்தாலும், அவற்றை வங்கிகளுக்கு விற்பனை செய்பவர்கள், எந்த வங்கிக்கு எந்த எண் என முடிவு செய்பவர்கள் இவர்களே...இவர்களிடம் அனைத்து வங்கிகளைப்பற்றிய செய்திகளும் நம்மைப்பற்றிய குறிப்புகளும் இருக்கும்...ஒவ்வொரு முறை நாம் அட்டையை வர்த்தக கடைகளில் உபயோகப்படுத்தும் போதும் இவர்களின் Network வழியாகத்தான் நம்மைப்பற்றிய செய்திகள் சரிபார்க்கப்படுகின்றன...

சில செய்திகள் இவர்களாலும் சில செய்திகள் வங்கிகளாலும் சரிபார்க்கப்பட்ட பின்னரே நமது அட்டைகளுக்கான பில் நம் கைக்கு வரும்..அதனால் தான் பில் போடும் போது சிறிது நேரம் நாம் காக்கவைக்கப்படுகின்றோம்...

எப்படி வேலை செய்கிறது...
1. நாம் Credit Card ஐ Swipe செய்யும் போது முதலில் Visa/Amex இவர்களிடமும் பின் நம் அட்டைக்குரிய வங்கிகளிடமும் நம்மைப்பற்றிய தகவல்கள் (பெயர், அட்டையின் எண், பிறந்த எண், Credit Limit) போன்றவை சரி பார்க்கப்படுகின்றன...அனைத்தும் சரி என்றால் தான் பில் வரும்...

2. ஒவ்வொரு நாளின் இறுதியிலும் வர்த்தகர்கள் அன்று வந்த அனைத்து கடனட்டை பில்களையும் ஒன்று சேர்த்து அவர்களின் வங்கிகளுக்கு அனுப்பி வைப்பர்..

3. வர்த்தகர்களின் வங்கிகள் மீண்டும் ஒரு முறை விவரங்களை சரிபார்த்து, அவர்களுக்குரிய தொகையை கடனட்டையின் மூலதாரர்களான visa/amex/master card இவர்களிடமிருந்து பெற்று வர்த்தகர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்..

4. இதற்கு பின் விசாவும், மாஸ்டர் கார்டும் கடனட்டையை நமக்களித்த வங்கியிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்கின்றனர்...

5. அவர்களுக்குப் பணத்தை கொடுத்த பின் நம் வங்கிகள் நமக்கு பணத்தை செலுத்தச்சொல்லி பில் அனுப்புகின்றனர்...

இப்படித்தான் ஒவ்வொரு முறை நாம் அட்டையை உபயோகிக்கும் போதும் நடக்கும்....இதில் நம்மைத்தவிர அனைவருக்கும் நாம் செலுத்தும் பணத்தில் சில சதவிகிதம் செல்லும்...ஏனென்றால் அனைவரும் நாம் பணம் செலுத்தும் முன்பே நமக்கான தொகையை வர்த்தகர்களிடம் சேர்த்துவிடுகின்றனர்...

இந்த பதிவை எழுதி சில நாட்களாக அப்படியே வைத்திருந்தேன்...இது எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும் என தெரியவில்லை...இருந்தாலும் இல்லை என்றாலும் சொல்லுங்கள் :)

16 பேர் கருத்து சொல்லி இருக்காங்க...:

Anonymous said...

நல்ல பயனுள்ள தகவல்.

நன்றி.

இய‌ற்கை said...

நல்ல தகவல்

கயல்விழி நடனம் said...

Thank You Frnds...

Truth said...

நல்லா தெளிவா சொல்லியிருக்கீங்க.

ஜோ/Joe said...

நீங்கள் Aquirer வங்கியை கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை.

எல்லா Transactions ம் VISA/Master/Amex /Diners -க்கு போக வேண்டிய அவசியமில்லை ..Merchant இணைந்துள்ள வங்கியின் அட்டையை பயன்படுத்தும் போது அதே வங்கி தான் Aquirer மற்றும் issuer ..எனவே அதை VISA/Master க்கு அனுப்ப வேண்டிய தேவையில்லை ..வேறு வங்கி அட்டை என்றால் தான் அனுப்ப தேவை.

நிறைய தகவல்கள் தெளிவில்லாமல் இருக்கிறது ..அதை தவிர்க்கவும்.

ஜோ/Joe said...

//வர்த்தகர்களின் வங்கிகள்(நமது அட்டைகள் கடைகளில் Swipe செய்யப்படும் வங்கிகள்) - Merchant Banks//

சரி ..இதைத் தான் நான் Aquirer Bank என்றிருந்தேன்.

ஜோ/Joe said...

// ஒவ்வொரு நாளின் இறுதியிலும் வர்த்தகர்கள் அன்று வந்த அனைத்து கடனட்டை பில்களையும் ஒன்று சேர்த்து அவர்களின் வங்கிகளுக்கு அனுப்பி வைப்பர்..//

தேவையில்லை ..நாள் இறுதியில் EDC மூலமாகவே settlement செய்தியை அனுப்பினாலே போதும் ..பின்னர் கணக்கு வழக்கில் வங்கிக்கும் வியாபாரிக்கும் முரண்பாடு வந்தால் மட்டும் பில்களை அனுப்ப வேண்டும்.

கயல்விழி நடனம் said...

நன்றி Truth, Joe..

Joe, ஆமாம்...அதைப்பற்றி எல்லாம் சொல்ல துவங்கினால் இன்னும் குழப்பம் வரும் பலருக்கு..இது ஒரு OVer All View...அவ்வளவுதான்...
இன்னும் தெளிவாக சொல்ல முயற்சி செய்கிறேன்....
நன்றி...

ஜோ/Joe said...

கயல்விழி,
உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.

ஒரு சின்ன சந்தேகம் ..இந்தியாவில் விற்பன்னர்கள் online settlement செய்வதில்லையா ? இன்னும் manual settlement தானா?

R.Gopi said...

Hello

Echuse me........

oru கடனட்டை(Credit Card), please...... enakke enakku vendaam.... use pannittu thiruppi thandhuduven..... ok......

Good, come out with more such posts Kayalvizhi........

(appadiye jokkiri, edakumadaku vandhu paarunga, aedhaavadhu sollunga....)

தமிழ்ப்பறவை said...

overall view என்ற அளவில் நல்ல பதிவு..
எனக்கு swipe பண்றது மட்டும்தான் தெரியும்,... மத்தத நானா கொஞ்சம் assume பண்ணிக்குவேன்.. ஓரளவு அது சரியாத்தான் இருக்கும் போல..
நன்றி...
joe சார் விரிவாப் பதிவு போட்டா நல்லா இருக்கும். போட்டிருக்காரான்னு தெரியலை. போய்ப் பார்த்திட்டு வர்றேன்...

கயல்விழி நடனம் said...

நன்றி கோபி, தமிழ்ப்பறவை...

நான் கடனட்டை உபயோகிக்கிறது இல்ல...
எப்பிடி...

இன்னும் கொஞ்சம் விரிவா போட்டு irukkalaam..ஆனா இந்த மாதிரி technical term எல்லாம் தமிழ்ல தப்பு இல்லாம எழுத்தனும்..கொஞ்சம் சோம்பேறித்தனம்...நாம சரியாத்தான் எழுதுறோமான்னு ஒரு பயம் வேற...அதான் Over View வோட நிறுத்திகிட்டேன்.. hehe

தமிழ்ப்பறவை said...

//ஆனா இந்த மாதிரி technical term எல்லாம் தமிழ்ல தப்பு இல்லாம எழுத்தனும்//
ஆமாமா... நல்லா ‘எழுத்துங்க தப்பில்லாம’

ஜோ/Joe said...

//joe சார் விரிவாப் பதிவு போட்டா நல்லா இருக்கும். போட்டிருக்காரான்னு தெரியலை. போய்ப் பார்த்திட்டு வர்றேன்.//

தமிழ்பறவை,
இதுவரை போடவில்லை ..இனிமேல் போடுவதிலும் ஆட்சேபணை இல்லை :). கடனட்டை சார்ந்த துறையில் பணிபுரிவதால் ஓரளவு தெளிவாக எழுதலாமென நம்புகிறேன்.

விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.

fun said...

//இப்படித்தான் ஒவ்வொரு முறை நாம் அட்டையை உபயோகிக்கும் போதும் நடக்கும்....இதில் நம்மைத்தவிர அனைவருக்கும் நாம் செலுத்தும் பணத்தில் சில சதவிகிதம் செல்லும்...ஏனென்றால் அனைவரும் நாம் பணம் செலுத்தும் முன்பே நமக்கான தொகையை வர்த்தகர்களிடம் சேர்த்துவிடுகின்றனர்...

How we are paying to others ? Whatever in the bill only we are paying to Bank who issued Credit Card? Through Credit Card we pay the same money as we pay as Cash to Merchant.

ஜோ/Joe said...

//How we are paying to others ? Whatever in the bill only we are paying to Bank who issued Credit Card? Through Credit Card we pay the same money as we pay as Cash to Merchant.//

Merchant has to pay MDR (Mostly 2 to 3% according to their agreement with Merchant bank) ,which will be shared by Merchant bank ,Issuing bank and Agents (VISA,Master etc)