இது தான் என் முதல் புத்தக கண்காட்சி அனுபவம். இதுவரை எனக்கு தேவையான தமிழ்ப் புத்தகங்களை திருச்சி மாநகரில் உள்ள அகஸ்தியர் மற்றும் சிந்தாமணி புத்தக நிலையங்களும் , சென்னையின் புதிய புத்தக உலகமுமே அளித்திருக்கின்றன. இப்போதெல்லாம் தமிழ் நாட்டின் இந்த இரு பெரும் நகரங்களுக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டதால் நண்பர் ஒருவர் அறிமுகப்படுத்திய anyindian இணையதளத்திலேயே வாங்குகிறேன்.
இந்த முறை எப்படியும் கண்காட்சிக்குப் போயே தீருவது என முடிவெடுத்ததால் வெள்ளிக்கிழமையே பெங்களூரிலிருந்து பயணத்தை துவக்கினேன் சொந்த ஊரை நோக்கி...சனிக்கிழமை மாலை தம்பி அருளின் அருளுடன் கண்காட்சி திடலுக்கு சென்ற என்னை பிரம்மிக்க வைத்தது அங்கிருந்த மக்கள் வெள்ளம். மாலை 7 மணிக்கு உள்ளே சென்ற நான் இரண்டே மணி நேரத்தில் அனைத்து (ஏறத்தாழ 200) கடைகளையும் பார்த்தாக வேண்டிய நிலைமை. முதலில் சென்றது விகடன் பதிப்பகத்திற்கு. கடைசி இரண்டு நாட்கள் என்பதாலா என தெரியவில்லை மிகக் குறைவான புத்தகங்களே இருந்தன. அதிகம் இருந்தது சக்தி விகடனின் புத்தகங்களும், ஹாய் மதன், என் எதற்கு எப்படி இவைகளுமே..கற்றதும் பெற்றதும் கூட கிடைக்க வில்லை..
என்னடா இது விகடனிலேயே எதுவும் இல்லையே என நினைத்துக்கொண்டு மற்ற கடைகளை நோக்கி நடக்க துவங்கினேன். ஒரு வழியாக உயிர்மைக்குள் நுழைந்து சுஜாதாவின் வண்ணத்துப்பூச்சி வேட்டை, கொலையுதிர் காலம் இரண்டையும் வாங்கிக்கொண்டு திரும்பினேன். அதுவரை காணமல் போயிருந்த என் தம்பி என்னை திட்டிக்கொண்டே பின்னால் நின்றிருந்தான். அவனையும் அழைத்துக்கொண்டு காலச்சுடுக்குள் சென்றேன். சில புத்தகங்களுக்கு பிறகு விகடனுக்குள் இருந்த அளவு உயிர்மை, காலச்சுவடு இரண்டிலும் கூட்டம் இல்லை..
சில தேடல்களுக்கு பிறகு என் கைகளில் இருந்தன எனக்காக "ராஜ திலகம்", "ஒரு புளிய மரத்தின் கதை", அப்பாவிற்காக "கரிசல் கதைகள்" ஆகிய புத்தகங்கள். சிறப்பு இணைப்பாக சமையல் குறிப்புகள் புத்தகம். இது அம்மாவிற்கு. (நமக்கும் உதவுமே!!!!!!!!!)
இந்த சமையல் குறிப்புகள் வாங்கும் போதே என் தம்பி என்னை போதும் என்ற பார்வை பார்க்க அவனுடன் எதாவது சாப்பிட நினைத்து வெளியே வந்தோம். அங்கே இருந்த கூட்டத்தை பார்த்த பிறகு தான் புரிந்தது....வெளியே இருந்த கூட்டத்திற்கான காரணம். புத்தகம் வாங்க வந்தவர்களை விட பொழுது போக்க வந்தவர்களே அதிகம்...
இந்த கூட்டத்தில் உள்ளே ஊடுருவிச்சென்று சாப்பிட முடியாது என தெரிந்ததால் இருவரும் வீட்டிற்கு செல்ல நினைத்து நடக்க துவங்கினோம். வரும் வழியில் எல்லாம் தம்பியின் school life,school friends பற்றியும் பேசிக்கொண்டே வந்தோம். (இந்த வரியை படித்துவிட்டு என்ன நக்கல் பண்ண போகிறானோ தெரியாது....)
ஒரு வழியாக என் முதல் புத்தக கண்காட்சியை முடித்துவிட்டு வீடு திரும்பினேன்..(ஆனால் வந்து சேர்ந்த கதையை இன்னொரு பதிவாகவே போடலாம்..கதை சுருக்கம் மட்டும் இங்கே..நாங்கள் வந்த bus break down ஆகி, சில கிலோமீட்டர்கள் நடந்து மீண்டும் ஒரு bus பிடித்து..ஸ்ஸ்ஸ் அப்பா வடிவேலு ஸ்டைல் ல சொன்னா முடியல...)
எப்போதும் போல இம்முறையும் பட்ஜெட் கொஞ்சம் ( கொஞ்சம் இல்ல..நிறையவே..) அதிகம். வாங்கிய புத்தகங்களை எல்லாம் படித்தே முடித்து விட்டேன்..ஆனால் இப்போது தான் இந்த பதிவை முடிக்க நேரம் கிடைத்தது..
Thursday, August 14, 2008
நெய்வேலி புத்தக கண்காட்சி - 2008
எழுதியது...
கயல்விழி நடனம்
at
6:08 PM
Labels: புத்தகங்கள்
Subscribe to:
Post Comments (Atom)

0 பேர் கருத்து சொல்லி இருக்காங்க...:
Post a Comment