நிலவோடு பேசும் நேரங்கள்...
மழையில் நனையும் தருணங்கள்...
தென்றல் கடந்து செல்லும் மாலைகள்...
மலர்களோடு உறவாடும் வேளைகள்...
மேகங்களில் முகம் பார்க்கும் முயற்சிகள்...
கடல் அலைகளில் கால் நனைக்கும் பொழுதுகள்...
வானவில்லில் நிறம் எண்ணும் வேளைகள்...
பனி சூழ்ந்த காலைகள்...
இவற்றில் எல்லாம்
இயற்கையை ரசித்த நான்
எப்போது உன் முகம் பார்க்கத் துவங்கினேனோ
அங்கே வேரூன்றியது தான்
உன் மீதான
என் காதல்.
Sunday, November 11, 2007
காதல் வேர்.
Subscribe to:
Post Comments (Atom)

1 பேர் கருத்து சொல்லி இருக்காங்க...:
not so practical pa...
Post a Comment