இந்த ஊரைப்பற்றி எதுவும் எழுதக்கூடாது என எந்த நேரத்தில் முடிவு செய்தேனோ..அதற்குப்பின் எதுவுமே எழுதவில்லை... IT உலகமே onsite-offshore என இயங்கிக்கொண்டிருக்கும் போது நான் மட்டும் என்ன விதிவிலக்கா...ஒவ்வொரு நாளும் வேலை முடியும் போது அடுத்த நாள் ஆரம்பமாகி விடுகிறது.. Project, Office, Laptop - இந்த வட்டத்திற்குள் வாழ்க்கை சுற்றுகிறது... (இப்போ எனக்கு தேவையில்லாம விஜய் பன்ச் டயலாக் ஞாபகத்துக்கு வருதே... ஐயோ....) சில நாட்கள் இந்த பொட்டி வேலை செய்யாமல் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. ஹ்ம்ம்.. அதற்கெல்லாம் லக் வேணும்.... (சொக்கா...சொக்கா... எனகில்ல... அந்த லக் எனகில்ல....) புலி வாலைப் பிடித்த கதையாகி விட்டது என் நிலைமை... இப்படியே விட்டு விட்டு எங்கேயாவது ஓடிப் போய்விட்டால் சந்தோஷமாக இருப்பேன்.. (தனியாத்தாங்க...)
***********************************************************************************************************************************
சில நாட்களின் ஜிமெயிலில் நான் வைத்திருந்த Status messages...
* கிடைக்காது எனத் தெரிந்தும், உன் நினைவுகளிடமிருந்து ஒளிந்து கொள்ள இடம் தேடி களைத்துப்போய்விட்டது மனது...
* மீண்டும் கிடைத்துவிடக்கூடாது என்ற வேண்டுதலோடு தான் ஒவ்வொரு முறையும் உன்னுள் தொலைந்து போகின்றேன்...
* தூக்கம் தொலைந்த பல இரவுகளில் மௌனமாக என் அருகில் அமர்ந்திருக்கின்றன உன் நினைவுகள்...
* உன் நினைவுகளுக்கு மட்டும் அனுமதி கிடைக்கும் மர்மம் தெரியாமல் என் கனவுகளும் குழம்பிப்போய் தான் உள்ளன....
* நீ வரும் நிமிடத்திற்காக என்னையும் மீறி விழித்திருக்கின்றன உனக்கான என் நினைவுகள்....
* உலகின் அத்தனை செய்திகளையும் பேசும் உனக்கு, என் உலகமே நீதான் என்பது மட்டும் புரியாமல் போனதன் காரணம் என்ன???
* எதையும் தாங்கும் வலிமையை என்னிடத்தில் விட்டுச் சென்றது உன் பிரிவின் வலி...
* எப்பொழுதும் என்னுள் விழித்துக்கொண்டிருக்கின்றன உனக்கான என் நினைவுகள்....
***********************************************************************************************************************************
ஒவ்வொரு இரவும் நலம் விசாரிக்கும் அப்பா அம்மாவின் குரல்களும், "எப்போது வருவாய், உயிருடன்தான் இருக்கின்றாயா" என்று வம்பிழுக்கும் நண்பர்களும் , படிக்க முடியாமல் போன புத்தகங்களும், எப்போதோ எடுத்த கிராமத்துப் புகைப்படங்களும், காரில் கேட்கும் பண்பலைகளும், கலந்துகொள்ள முடியாமல் போன நண்பர்களின் திருமணங்களும், கடந்து செல்லும் பேருந்துகளும், மழை ஈரம் காயாத சாலைகளும், ஏதாவதொரு விதத்தில் தினம் தினம் என் உலகத்தை நினைவுபடுத்திச் செல்கின்றன.. நாட்களை எண்ணிக்கொண்டு நானும் காத்திருக்கிறேன்...
Tuesday, March 16, 2010
புலி வாலைப் பிடித்த கதை ...
எழுதியது...
கயல்விழி நடனம்
at
12:21 PM
14
பேர் கருத்து சொல்லி இருக்காங்க...
Labels: அனுபவம்...
Friday, October 23, 2009
எனக்கான உன் தருணங்கள்....
காற்றுக்குக் கூட இடம் தராமல்
நீ இறுக்கி அணைக்கும் விநாடிகள்...
"மாலை சந்திப்போம்" என்று
பேசும் உன் காலை நேரக் கண்களின்
மெல்லிய சோகம்....
உதடுகள் காதுமடல் உரச
ரகசியமாய்
நீ சொல்லும் ஐ லவ் யு க்"கள்.."
எனக்காகவே நீ படிக்கும்
தபூ ஷங்கர் புத்தகங்கள்....
ஒவ்வொரு இரவிலும்
நீ வைக்கும்
செல்லப்பெயர்கள்....
மின் அரட்டைகளின்
Status Messageஇல்
எனக்காக நீ வைக்கும்
நீ வைக்கும் காதல் வரிகள்....
தினமும் மாலையில்
முதன் முதல் சந்திப்பது போல்
என்னைப் பருகும்
உன் கண்களின் பார்வை...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இப்படி நான் சுமாராக எழுதுவதையும்
படித்து சுவையோடு நீ சொல்லும் பாராட்டுக்கள்...
.
முடிவில்லாமல் நீள்கிறது
எனக்கான உன் தருணங்கள்....
:::::::::::::::....வாக்குமூலம்...::::::::::::::
இது கவிதை ன்னு சொன்னா நம்பவா போறீங்க.... நம்பினாலும் நம்பாவிட்டாலும் இது கவிதை மாதிரி எழுத்தப்பட்ட ஒரு மொக்கை.... ரொம்ப நாளா ப்லோக் அப்டேட்டவே இல்ல.... அதனாலதான் உங்களுக்கெல்லாம் இப்படி ஒரு தண்டனை.... யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...
எழுதியது...
கயல்விழி நடனம்
at
9:54 AM
18
பேர் கருத்து சொல்லி இருக்காங்க...
Labels: மொக்கை
Friday, October 9, 2009
கேப்டன் தொகுதியாக்கும்...
1. A - available/single? - Single...
2.B-.Best friend - S.J Surya படமா??? அது பேர் மாத்தி தான அ..ஆ.. ன்னு வந்தது?? :P (ok..ok... All my frnds are my Best Friends..)
3.C- Cake or Pie - C ல வேற வார்த்தையே இல்லையா???
4.D - Drink of Choice - Tea, masala tea
5.E- Essential item you Use every day - லிஸ்ட் கொஞ்சம் பெருசா இருக்குமே பரவா இல்லையா???
6.F-favorate color - கருப்பு..., வெள்ளை...
7.G-gummy bears or worms - Sorry... Next question pls..
8.Home Town - கேப்டன் தொகுதியாக்கும்...
9.I-Indulgence - Travel.
10.J- january/february - அவ்ளோ தானா?? மீதியெல்லாம் சொல்லி தரலையா ஸ்கூல்ல???
11.K-Kids and their Names - இந்தக் கேள்வி எனக்கு இல்ல..
12.L-Life is incomplete with out - L, I , F, E இதுல இந்த லெட்டர் இல்லன்னாலும்.. (ஹிஹி...)
13.Marriage Date - இந்தக் கேள்வியும் எனக்கு இல்ல..
14.N - Number of sibilings - ஒரு தம்பி...
15.O-Orange or Apples - நியூட்டனின் ஆப்பிள் தான்... :P
16.P- Phobias/fears - Sorry... கமல் அளவுக்கு பட்டியல் போட முடியாது... (அப்படி எதுவும் எனக்கு இருப்பதா தெரியலையே...)
17.Q-Quote for today - Wait... Orkut ல செக் பண்ணிட்டு வரேன்...இதோ... இது தான் இருந்தது... "Nobody can go back and start a new beginning, but anyone can start today and make a new ending"
18.R-Reason to Smile - இதுக்கெல்லாம் காரணம் சொல்லிட்டா இருக்க முடியும்?? ஹி..ஹி..ஹி..
19.S-Season - மழை/பனி/க்காலம்...
20.T-Tag4 People - கோபி, தமிழ்ப்பறவை, சஞ்சய்...(3 பேர மாட்டி விட்டா போதும்...)
21.U-Unknown fact about me - யாருக்கு unknown??? உங்களுக்கா இல்ல எனக்கா???
22.V-Vegetable you won't Like - வெண்டைக்காய், கத்தரிக்காய், பரங்கிக்காய்.., பாகற்காய்.. (ஹலோ...ஹலோ.. நான் ஒன்னும் காய்கறி விக்கல...எனக்கு பிடிக்காத காய்கறி லிஸ்ட் இது....)
23.W-worst Habit - blogging... hehehe....
24.X- Xrays you had - X லயும் வேற வார்த்தை கிடைக்கலையா???
25.Y-Your favorate Food - (இது நம்ம மேட்டர்...) இட்லி, தோசை, சாம்பார்,தேங்காய் சட்னி..
26.Z-Zodiac sign - சிம்மம்...
அன்புக்குரியவர்கள் - அப்பா, அம்மா, தம்பி மற்றும் நண்பர்கள்..
ஆசைக்குரியவர் - கிடைத்ததும் சொல்கிறேன்...
இலவசமாய் கிடைப்பது - அறிவுரை and Ideas
ஈதலில் சிறந்தது - கல்வி...
உலகத்தில் பயப்படுவது - எனக்கு தான்...
ஊமை கண்ட கனவு - ஏன்?? ஏன் இப்படி எல்லாம்??
எப்போதும் உடன் இருப்பது - Repeated Question...
ஏன் இந்த பதிவு - நான் பென்ச்ல இருக்குறதா நம்பி மணிகண்டன் அழைத்ததால் இந்தப்பதிவு... (என்ன மணிகண்டன் சார்... எந்த நேரத்துல பதிவெழுத கூப்பிடீங்க??? வேற ப்ராஜெக்ட் கிடைத்து இப்போ தான் புது ஊர்ல செட்டில் ஆகிட்டு இருக்கேன்...அதனால தான் லேட்....)
ஐஸ்வர்யத்தில் சிறந்தது - கல்வி...
ஒரு ரகசியம் - அதான் ரகசியமாச்சே...
ஓசையில் பிடித்தது - மௌனம்...
ஔவை மொழி ஒன்று - Vijayantony யின் ஆத்திச்சூடி பாட்டு கேளுங்க..
(மறுபடியும் A, B, C, D,.....Z, அ, ஆ சொல்லி தந்ததுக்கு ரொம்ப நன்றி... :) )
எழுதியது...
கயல்விழி நடனம்
at
11:38 AM
12
பேர் கருத்து சொல்லி இருக்காங்க...
Wednesday, September 23, 2009
சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கே..........
படித்தது - மூங்கில் கோட்டை..(சாண்டில்யன்..)
வழக்கமான சாண்டில்யனின் வரலாற்று நாவல்... பாண்டிய நாட்டில் மூங்கில் கோட்டைக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் சேர மன்னனை காக்க நாயகன் இளமாறன் (இந்த பெயரைப் படித்தவுடன் கௌதம் மேனன் புண்ணியத்தில் "காக்க காக்க", "வேட்டையாடு விளையாடு" இரண்டும் நினைவில் வந்து சென்றது) போராடுவதே கதை.... இதிலும் மிகவும் அழகாக ஒரு நாயகி, சேர மன்னனை தப்ப வைக்க உதவும் ஒரு நாயகியின் கல்விக் குரு..., பாண்டிய மன்னனுக்கு உதவும் சித்தர்..(இவர்தான் இளமாறனின் அப்பா என்ற உண்மை கடைசியில்...).
சாண்டில்யனின் நாயகன் படைத்தலைவனாக இருப்பான்..இதில் இல்லை... மூங்கில் கோட்டை என்ற ஐடியா புதிது... கீழே அகழியும், மேல்பகுதி மூங்கிலால் மூடப்பட்டு மண் பூசி மறைக்கப்பட்ட அந்தக் கோட்டையின் ஆபத்தை சாண்டில்யனின் வரிகள் உணர்த்துகின்றன... ஒரு இரவில் கோட்டையின் சில இடங்களில் மண்ணைப்பெயர்த்து மன்னனைக் காப்பாற்றி கோட்டைக்குத் தீ வைக்கின்றான் இளமாறன்... மிகச்சிறிய நாவல்.... அந்தக் கோட்டையின் வர்ணனைக்காகவே ஒரு முறை படிக்கலாம்....
&&&&&&&&&&&&&பார்த்தது - உன்னைப்போல் ஒருவன்...
ஊரே இதைப்பற்றி பேசுகிறது.... முதன் முதலாக வெளியான முதல் நாளே நான் பார்த்த படம்... எனக்கு பிடித்து இருந்தது... கமலின் சீரியஸ் படங்களில் நான் ரசித்து பார்த்தது இந்தப் படமாகத்தான் இருக்கும்.... கண்டிப்பாக இன்னொரு முறை பார்ப்பேன்... கமல் மாதிரி ஒரு ஆள் இப்படி ஒரு படம் எடுத்ததற்கு சந்தோஷப்பட வேண்டும்... இப்போதைக்கு இவ்ளோ தான்.... (இதுக்கு மேல போன வம்பு...அதுக்கு நான் வரல...)
&&&&&&&&&&&&&கேட்டது - யாரது யாரோ யாரோ.. (நா.முத்துகுமார்.., - யாதுமாகி..)
Belly Raj, Madhusree பாடிய இந்தப்பாடல் தான் சில மாதங்களாக நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பது... இன்னொரு "கண்களிரண்டால்" ரெடி... ஜேம்ஸ்வசந்தன் என்ற பெயர், முத்துக்குமாரின் வரிகள், இவைதான் இந்த பாடல் கேட்க்கப்படக் காரணம்....,
போதும் என்று சொன்னாலுமே கேட்க்காதடி இந்தக் காதல்...
போதும் என்று எப்போதுமே சொல்லாதடா இந்தக் காதல்....
....
ஊடல் கொஞ்சம் தேடல் கொஞ்சம் ரெண்டும் சேர்ந்து காதல் செய்வாயோ....
கேட்டுச் சலிப்பதற்கு இன்னும் எத்தனை நாட்களோ வருடங்களோ தெரியவில்லை.... பாடலை படமாக்குவதில் சொதப்பாமல் இருக்க வேண்டும்....
&&&&&&&&&&&&&
ரசித்து சிரித்தது... - தில்லு முல்லு....
முழு படத்தையும் youtube ல அப்லோட் பண்ணிய அந்த மகானுக்கு நன்றி.....
&&&&&&&&&&&&&
ஒரு சந்தோஷமான செய்தி...
உங்க சங்காத்தமே வேண்டாம்டா, நாங்களே எல்லாத்தையும் பாத்துக்குறோம் நீங்க கேளம்புங்கன்னு எங்க கிளையன்ட் சொல்லிட்டாங்க... எங்க ஆளுங்களும் வெவரம்....இத இத தானடா நாங்களும் எதிர்பார்த்தோம்ன்னு எஸ்கேப்... மேட்டர் என்னன்னா ஒரே ஊர்ல ரெண்டு தாதா இருக்க முடியாது.... அவ்ளோதான்... (இத இவ்ளோ சந்தோஷமா கொண்டாடுற ஆள் நானா தான் இருக்கும்....)
&&&&&&&&&&&&&
இன்னொரு சந்தோஷமான செய்தி...
அடுத்த ப்ராஜெக்ட் தேட வேண்டிய கட்டாயத்துல நான்.... இதுல என்ன சந்தோஷமா?? ஒரு வாரத்துக்கு பென்ச்ல இருக்கலாம்...(இதுவரைக்கும் பென்ச்ல இருந்ததே இல்லப்பா...)
&&&&&&&&&&&&&
இது எப்பூடி இருக்கு..!!!!!!!!!!!!!!!!!!!
உன் தோள் உரசி நடக்கும் சுகத்திற்காகவே
என் வெட்கத்தை ஒளித்துவைத்து
உன்னுடன் வருகிறேன்....
**********
உன் கைகளின் ஸ்பரிசத்தைவிட
உன் கண்களின் ஸ்பரிசத்தில் தான்
அதிகம் இழக்கிறேன் என்னை....
**********
எழுதியது...
கயல்விழி நடனம்
at
2:59 AM
12
பேர் கருத்து சொல்லி இருக்காங்க...
Labels: சினிமா, புத்தகங்கள், மொக்கை
Thursday, August 13, 2009
நீங்க எல்லாம் எப்போதான் திருந்துவீங்க????
அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகள்.. எங்கள் ஊரில் நடந்து கொண்டிருக்கும் கொடுமையே இது.... கிளிமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இப்போது குறுவை நெல் அறுவடை நடந்துகொண்டுள்ளது... அரசு துவங்கிய நெல் கொள்முதல் நிலையங்களில் தான் சென்ற அறுவடை முதல் மக்கள் நெல்லை கொடுத்து வந்தனர் அரசு கொடுக்கும் நல்ல விலைக்காக...
ஆனால் இந்த கொள்முதல் நிலையங்களில் நடக்கும் அட்டகாசங்களால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை எழுந்துள்ளது.... இந்த நிலையத்தில் நெல் மூட்டைகளைக் கையாள்வதற்கு மூட்டைக்கு (40 கிலோ) ரூ.2.40 வீதம் அரசு கூலி வழங்குகிறது. ஆனால் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரிவோர், விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ7.00.௦௦ கேட்கின்றனர்.... ஏன் இப்படி என்று கேட்டால் கொள்முதல் நிலையத்தை மூடிவிட்டு சென்றுவிடுகின்றனர்... குறுவையில் நெல் அறுவடை செய்த மக்கள் மூட்டைகளை வீட்டில் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டுள்ளனர்....
அரசாங்கம் குவிண்டாலுக்கு ரூ1050௦ என விலை நிர்ணயம் செய்துள்ளது... தனியார் வியாபாரிகளோ குவிண்டால் ரூ840 ௦க்கு எடுக்கின்றனர்.... இந்த இடைத்தரகர்களின் தொல்லையால் நெல்லுக்கு சரியான விலை கிடைக்காமல் தவித்த மக்கள் கொள்முதல் நிலையம் வந்தபோது கொஞ்சமல்ல நிறையவே மகிழ்ச்சி அடைந்தனர்... ஆனால் இப்போது கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கும் இந்த தனியார் வியாபாரிகளுக்கும் உள்ள ரகசிய உடன்பாடே, நிலையத்தினர் மக்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செயாமலிருப்பதற்குக் காரணம்.... எங்களிடமிருந்து ௮௪௦க்கு வாங்கும் வியாபாரிகள் நிலையத்தில் அதே நெல்லை 1050௦ க்கு விற்கின்றனர்...இதில் அலுவலர்களுக்கு தனி கமிஷன் வேறு....
இதைப்பற்றி மாவட்ட ஆட்சியரிடம் புகார் சென்ற மறுநாள் கொள்முதல் நிலையம் சிறிது நேரம் திறக்கப்பட்டது... ஆனால் அன்றும் அவர்கள் அடித்த கூத்து இருக்கின்றதே...இது நாள் வரை ஒரு மூட்டைக்கு ரூ7.00 கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அன்று ரூ15.00 கேட்டனர்...(அப்போது தானே யாரும் வரமாட்டார்கள்...) அதுவும் சிலமணி நேரங்களே....பிறகு வழக்கம் போல் நிலையத்தை மூடிவிட்டனர்...
இவர்கள் அனைவருக்கும் அரசாங்கம் சம்பளம் தருகிறது தானே...விவசாயிகளுக்கு வருமானமே இதுதான்...அடுத்த 6 மாதங்களுக்கு அவர்களின் வாழ்க்கை இதை வைத்துதான் உள்ளது....அதிலும் இப்படிக் கை வைத்தால் என்ன செய்ய முடியும் அவர்களால்??? இதையெல்லாம் பார்க்கும் போது தோணுவது இந்த பழமொழிதான்...."உழுதவன் கணக்கு பாத்தா உழக்கு கூட மிஞ்சாது..."
எழுதியது...
கயல்விழி நடனம்
at
3:25 AM
10
பேர் கருத்து சொல்லி இருக்காங்க...
Labels: அனுபவம்..., கிளிமங்கலம், நீங்க எல்லாம் எப்போதான் திருந்துவீங்க?
Saturday, August 8, 2009
அமெரிக்க வாழ் அம்மாஞ்சிகளின் அலம்பல்கள்....
தமிழ்ல ழகரமே ஒழுங்கா வரலைன்னாலும் அமெரிக்கா வந்த 3 மாசத்துல அவங்க ஊரு இங்கிலீஷ் பேசுறேன் பேர்வழின்னு ஏன்யா அவங்களையும் கொன்னு அவங்க மொழியையும் கொல்றீங்க??? பாப்பனாயக்கம்பட்டி பழனிச்சாமி பேரன்னா அந்த மாதிரி நடந்துக்க மாட்டீங்களா???
எங்க ஊர்ல 1000 நல்ல விஷயம் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுட்டு என்னமோ அமெரிக்காவுலையே பொறந்து வளந்த மாதிரி எப்போபாத்தாலும் உங்க ஊர்ல pollution அதிகம், traffic அதிகம், population அதிகம்ன்னு ஏன் குறை சொல்லிகிட்டே இருக்கீங்க??
10 நாள் லீவ் ல இந்தியா போகச் சொன்ன என்னமோ அங்கே எதுவுமே கிடைக்காத மாதிரி லேஸ் சிப்ஸ் முதல் கொண்டு Dove soap வரைக்கும் வாங்கிட்டு போய் அசடு வழியறீங்களே... அது ஏன்???
அதே மாதிரி இந்தியாவுல சொந்த ஊருக்கு போய் என் குழந்தைக்கு சீரியல் தான் சாப்பிட கொடுப்பேன்..இட்லி சாப்பிட்டா அவனுக்கு/ளுக்கு ஒத்துக்காதுன்னு ஏன் படம் காட்டுறீங்க??? நீங்க எல்லாரும் அதே இட்லி சாப்பிட்டு வளந்தவங்க தானே???
முக்கியமா அமெரிக்காவுல இருக்குற வரைக்கும் இந்தியாவ எந்த அளவுக்கு நக்கல் பண்ண முடியுமோ அந்த அளவுக்கு பண்ணிட்டு, உங்க குழந்தைங்களுக்கு ஒரு 10/12 வயசானவுடனே குடும்பத்தோட இந்தியாவுக்கு ஓடி வர்றீங்களே அது ஏன்??? வந்தது தான் வந்தீங்க, என்னமோ இதுக்கு முன்னாடி இந்தியாவுல வாழாதது மாதிரி ஏன் எதுக்கெடுத்தாலும் "U.S ல எல்லாம்", "when We were in US" ன்னு கதை விடுறீங்க???
பாரதிராஜா கிராமத்துல பிறந்திருந்தாலும் கௌதம் மேனன் படத்துல வர்ற மாதிரி வீட்ல கூட இங்கிலிஷ்ல பேசனும்ன்னு ஏன் அடம் பண்றீங்க?? அப்படியே பேசினாலும் இந்த "Awesome", "Sounds Good","Lovely" இதெல்லாம் இல்லாம உங்களால பேசவே முடியாதா????
நீங்க பண்ற அலம்பல்களை எல்லாம் இப்படியே சொல்லிகிட்டே போகலாம்....வேணாம்....வலிக்கிது.. நாங்களும் எவ்ளோ நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது???? விட்டுடுங்க....நாங்க பாவம்..(நாங்க மட்டுமா??? உங்க அமெரிக்காவும் தான்...)
எழுதியது...
கயல்விழி நடனம்
at
12:14 PM
23
பேர் கருத்து சொல்லி இருக்காங்க...
Labels: அனுபவம்..., அமெரிக்கா, மொக்கை
Tuesday, July 14, 2009
தி.மு.க - அ.தி.மு.க : என்ன வித்தியாசம்???
இந்த வாரம் டிரெக்கிங் போன போது நண்பர் சொன்ன ஜோக் இது....(ஓகே..ஓகே...மொக்கை இது...)
நண்பர் : கடலை காட்டுல அ.தி.மு.க ஆட்கள் கடலை திருடி சாப்பிடுவதற்கும் தி.மு.க ஆட்கள் திருடி சாப்பிடுவதற்கும்
என்ன வித்தியாசம்????
நான் : ?????????????????????
நண்பர் : அ.தி.மு.க ஆட்கள் சாப்பிட்டுவிட்டு கடலை செடியை அங்கேயே அப்படியே போட்டுவிட்டு போய் விடுவார்கள்....
தி.மு.க ஆட்கள் சாப்பிட்டுவிட்டு கடலை செடியை மீண்டும் நட்டு வைத்துவிட்டு போவார்கள்....
நான் : அயோ சாமி....அமெரிக்கா வந்தும் இப்படி எல்லாம் என்னை கொல்றாங்களே......
(நிறைய பேருக்கு இந்த மொக்கை தெரிந்து இருக்கலாம்...எனக்கு போன வாரம் தான் Bad time....இது ஜோக் தான் சாமி.....வேற எந்த உள்குத்தும் இதுல இல்ல...)
~*~*~*~*~*~*~**~*~*~*~*~*~**~*~*~*~*~*~*~*~*
இன்னொரு மொக்கை......(உபயம் கடலை கதை சொன்ன அதே நண்பர்....)
நண்பர்: (மனைவியிடம்....ஒரு காரைக் காட்டி....) இந்த கார் முன்னாடி பின்னாடி ரெண்டு பக்கமும் போகும்...தெரியுமா????
மனைவி: அப்படியா???? எப்படிங்க அது முடியும்?? புது டெக்னிக் ஏதாவது வந்திருக்கா???
நண்பர்: இல்ல...இல்ல....அதுக்கு நீ ரிவேர்ஸ் கியர் போட்ட போதும்....
மனைவி: !@#%$&^%#^!%#&!%!@#^!&*
(அநியாயத்துக்கு அப்பாவியான மனைவி போல....நாமா இருந்தா "ரொம்ப பழைய மொக்கை....புதுசா ஏதாவது ட்ரை பண்ணுங்கப்பா"...)
~*~*~*~*~*~*~**~*~*~*~*~*~**~*~*~*~*~*~*~*~*
தமிழ் FM விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி....
loka.fm - இந்த சைட்ல சூரியன், Radio City மற்றும் ஆஹா FM channels கேக்கலாம்...ஆனா 7am - 9pm தான் வொர்க் ஆகும்...ரேடியோல பாட்டு கேக்க ஆசை இருக்குறவங்க கேக்கலாம்...So கேளுங்க...கேளுங்க...கேட்டுகிட்டே இருங்க...என்ஜாய் மாடி...(ச்ச...) என்ஜாய் பண்ணுங்க...
~*~*~*~*~*~*~**~*~*~*~*~*~**~*~*~*~*~*~*~*~*
இங்கே வந்ததற்கு பிறகு புத்தகங்களை பார்க்கக்கூட இல்லை... இதோ இந்த வாரம் தான் நண்பரின் உதவியோடு சில புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து வர முடிந்தது....(ஆனா எல்லாமே இங்கிலிபீசு நாவல் :-( நம்ம நேரம் அப்படி...) இங்கே நூலகத்தில் எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் எடுத்து வரலாம் (எல்லாத்தையும் படிப்பியான்னு கேள்வி கேக்க கூடாது)... நாம் கேட்கும் புத்தகம் இல்லை என்றால் அடுத்த நூலகத்திலிருந்து வரவழைத்துக் கொடுக்கின்றனர்...
எழுதியது...
கயல்விழி நடனம்
at
10:55 AM
10
பேர் கருத்து சொல்லி இருக்காங்க...
Labels: மொக்கை
